பார் போற்றும் பாகவத மேளா: பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இரண்யன், பிரகலாதன், லீலாவதி

பார் போற்றும் பாகவத மேளா: பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இரண்யன், பிரகலாதன், லீலாவதி
Updated on
1 min read

பழைய மரபுவழி வந்த ஒரு நாட்டிய நாடகம், பாகவத பஜனை சம்பிரதாயப்படி லட்சுமி நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பாகவத புராணத்தைப் படித்து அது சொல்லும் நீதிமுறைகளை கடைபிடித்து வாழ வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக பாகவத மேளா நாடகங்கள் அமைந்துள்ளன.

குழுவாகக் கூடி, இசைக் கருவிகளுடன் இறைவனைப் புகழ்ந்து பாடும் பக்தர்கள், பாகவதர்கள், கிருஷ்ண பக்தர்கள் என்று அழைக்கப்படுவர். பிரகலாதன், நாரதர், வியாசர், கம்பரீசர் (கபிலர்), சுகன் (சுகதேவ கோஸ்வாமி), சௌநகர், பீஷ்மர், ருக்மாங்கதன், அர்ச்சுனன், வசிஷ்டர், விபீஷணர், பௌண்டரீகர் ஆகிய பன்னிருவர் பரம பாகவதர்களாக அழைக்கப்படுகின்றனர்.

பரத முனியின் நாட்டியசாஸ்திரம் குறிப்பிடும் செவ்வியல் நாட்டிய நாடக இலக்கணங்களை உள்ளடக்கிய ஒரு கலை வடிவமாக பாகவத மேளா நாட்டிய நாடகம் விளங்குகிறது. இராமாயண, மகாபாரதக் கதைகளே இந்த நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in