

கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் பூந்தோட்டத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள திருவீழிமிழலை தலத்தில் பத்ரவல்லியம்மன் சமேத பத்ரவல்லீஸ்வரர், நரம்பு பிரச்சினைகளைத் தீர்ப்பவராக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: பல நூறு வருடங்களுக்கு முன்னால் ‘புரூரவஸ்’ என்ற மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு வலிப்பு கண்டு, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் நோய் குணமடையவில்லை. நிறைவில் திருவீழிமிழலை தலத்துக்கு வந்து ஈசனை வேண்டினாள். அன்றிரவு பத்ரவல்லியின் கனவில் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி, ‘கிணறு வடிவமான வலி தீர்த்தத்தில் நீராடி, எம்மை வழிபட்டால் உன் நோய் குணமடையும்’ என்று திருவாய் மலர்ந்தார்.