கேட்ட வரம் அருளும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் | பரிகார ஸ்தலங்கள்

கேட்ட வரம் அருளும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 77-வது திவ்ய தேசம் ஆகும். கேட்டவை அனைத்தையும் அருள்பவராக, ஆதிகேசவ பெருமாள் போற்றப்படுகிறார்.

மூலவர்: ஆதிகேசவ பெருமாள்

தாயார்: மரகதவல்லி நாச்சியார்

தல வரலாறு: பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும்,முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள்.

அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறு என அழைக்கப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in