அதிகாரத்தின் தர்க்கமும் வென்றவனின் நீதியும்: கம்பராமாயண வாலி வதை - ஓர் ஆய்வு

அதிகாரத்தின் தர்க்கமும் வென்றவனின் நீதியும்: கம்பராமாயண வாலி வதை - ஓர் ஆய்வு
Updated on
3 min read

உலக இலக்கியப் பரப்பில், அறம் மற்றும் ஒழுக்கத்தின் எல்லைகளை மீள்வரையறை செய்த விவாதக் களங்கள் சிலவே உள்ளன. அவற்றுள் மிக உன்னதமானதும், தத்துவச் சிக்கல்கள் நிறைந்ததுமான ஒரு பகுதி கம்பராமாயணத்தின் ‘வாலி வதைப் படலம்’ ஆகும்.

இராமனை ஓர் எட்டாக்கனி போன்ற பரம்பொருளாக மட்டுமே காட்டாமல், மானுடப் பண்புகளும், உலகியல் எல்லைகளும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாகவும் சமநேரத்தில் கம்பர் காட்சிப்படுத்துகிறார்.

இராமனை ஒரு பயணத்தின் இரண்டு தடங்களில் கம்பர் இந்த இடத்தில் காட்டுகிறார். ஒரு தடத்தின் மீது அவனைப் பரம்பொருளாகவும், அதன் பொருட்டு சுக்ரீவன் சரணடைந்ததை முன்னிறுத்தி இலக்குவன் மூலமும் பேசுகிறார். (மூவகை உலகிற்கும் மூல காரண...) மற்றொரு புறம், சாதாரண மனிதனாக தர்மத்தைக் காக்கும் பொருட்டு, தன்னுடைய மனைவியை இழந்த வருத்தத்தின் உச்சத்தில் அவன் வாலியை வதம் செய்ய முடிவு செய்ததாக வாலியின் வார்த்தைகளில் காட்டுகிறார்.

(மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை...) இராவண வதம்தான் இராம அவதாரத்தின் நோக்கம். அதை நோக்கிப் பயணப்படும் இராமன், எந்தத் தவறை இராவணன் செய்தானோ, அதே பஞ்சமா பாதகங்களில் மிக உயரிய தவறுகளான காமத்தையும், பொய்யையும், களவையும் மேற்கொண்ட வாலியை, அவன் சரணாகதி அடைந்த காரணத்தால் விட்டுவிடுதல் என்பதோ, அல்லது அவனது வரத்தை முன்னிட்டு அவனை அழிக்காமல் புறம்தள்ளுதலோ காப்பிய நோக்கத்துக்கும் அவதார நோக்கத்துக்கும் முரணாக அமையுமே தவிர உடன்படாது.

எனவே, அவனது வரங்களையும் சுட்டிக் காட்டி, அவனது தவறுகளையும் சுட்டிக்காட்டி, அதனையும் தாண்டி தர்மத்தை நிறுவும் பொருட்டு கம்பர் இராமனை இந்த முடிவை எடுக்கச் செய்தார் என்று நாம் கொள்ளலாம்.

மறைந்து நின்று வாலியைக் கொள்ள அம்பு எய்த இராமனின் செயல், வெறும் போர்க்கள உத்தி மட்டுமல்ல; அது “தோற்றவன் என்னதான் நியாயம் பேசினாலும், வென்றவன் சொல்வதே உலகியல் நீதியாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற உலகப் பொது நியதியை நிலைநிறுத்தும் வரலாற்றுப் பாடம் ஆகும்.

கம்பரின் இரட்டை அணுகுமுறை

கம்பரின் கவித்துவ மேதைமை இராமனை ஒரே நேர்கோட்டில் நிறுத்த மறுக்கிறது. இராமனை கடவுளாக மட்டுமே பார்த்தால், அவனது அனைத்துச் செயல்களும் ‘லீலை’ என்ற ஒற்றைச் சொல்லில் சுருங்கிவிடும்; ஆனால் கம்பர் இராமனை அயோத்தியின் இளவரச னாக, காட்டில் மனைவியைத் தொலைத்துவிட்டு அல்லாடும் ஒரு சராசரி மனிதனாக, உலகியல் பந்தங்களுக்கும் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்பட்டவனாகவே காட்டுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in