

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மோட்ச ரங்கநாதர் - ரங்கஸ்தலா கோயில், ‘முக்தியின் நுழைவு வாயில்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விக்கிரகத்தை முதலில் சப்த ரிஷிகள் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஹொய்சால மன்னர்கள் பிரம்மாண்டமாக கட்டிய மோட்ச ரங்கநாதர் கோயில், ஒரு கட்டத்தில் போதுமான கவனிப்பில்லாமல் போனது. 1990-களில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் பெங்களூர் இஸ்கான், பொதுமக்களின் ஆதரவுடன் கோயில் சீரமைக்கப்பட்டது. 2013-ல் தெற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், மற்ற திசைகளில் 3 கோபுரங்கள் எழுப்பப்பட்டன.
நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம், அதன் உச்சியில் பெரிய கருடாழ்வார் சிலை, ராஜகோபுரத்தில் அனந்த சயன ரங்கநாதர் சிலை ஆகியன கட்டிடக் கலையை சிறப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன.