வேலை வாய்ப்பு அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் | பரிகார ஸ்தலங்கள்

வேலை வாய்ப்பு அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத கைலாசநாதர் கோயில், வேலை வாய்ப்பு அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மூலவர்: கைலாசநாதர்.

அம்பாள்: சிவகாமசுந்தரி.

தாருகா வனத்தில் அமரகுந்தி என்ற ஊரை கெட்டி முதலியார் என்பவர் ஆண்டு வந்தார். பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்லும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் கேட்டு அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். தான் கேள்விப்பட்ட தகவல்படி அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது.

அதை கண்டு பரவசப்பட்ட அவர், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து மகுடேறி மகுடசூடாவடி மன்னன் மணிமன்னன் வணங்கினும் வணங்காமுடி, தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in