மத நல்லிணக்கத்தின் அடையாளங்கள்

மத நல்லிணக்கத்தின் அடையாளங்கள்
Updated on
1 min read

பள்ளிவாசல் என்பது இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தும் வழிபாட்டுத் தலமாகும். தினமும் ஐந்து வேளை தொழுகைக்காக பாங்கு கூறப்பட்டு, இமாமின் தலைமையில் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகள் மற்றும் பெருநாள் தினங்களில் சிறப்பு தொழுகைகளும் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 7,000 பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்களில் ஆண்களும் பெண்களும் தொழலாம். பல இடங்களில் பெண்களுக்கென தனி வசதிகளும் உள்ளன. பிற மதத்தினர் பள்ளிவாசல்களுக்குள் வருவதற்கு பொதுவாகத் தடை இல்லை.

தர்காக்களின் இயல்பு இதிலிருந்து வேறுபட்டதாகும். தர்கா என்பது ஓர் இறையடியார் அல்லது வலியுல்லாஹ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மையமாகக் கொண்டு உருவான நினைவிடமும் ஆன்மிகத் தலமும் ஆகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in