

அனைவராலும் அப்பா என்று அன்பாக அழைக்கப்படும் பீரப்பா தக்கலையில் மறைந்து வாழும் ஒரு மகத்தான சூஃபி சித்தராவார். பதினெண் சித்தர்களின் பெரியஞானக் கோவைத் தொகுப்பில் இவருடைய ஞான இரத்தினக் குறவஞ்சியும், திருமெய்ஞான சரநூலும் இடம் பெற்றிருக்கிறது. 18,000 ஞானப் பாடல்களை தமிழுக்கு தந்த பீரப்பாவின் பாடல்கள், மெய்ஞானப் பாதையில் பயணிப்பவர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது.
இவர் பல ஆண்டுகள் கேரளாவில் தவம்புரிந்த இடமானது இவர்களுடைய பெயரில் ‘பீ்ர்மேடு’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் மீதுள்ள உரிமையை வெளிப்படுத்தும் விதமாக தனது ஞானப் புகழ்ச்சியின் 139-வது பாடலில் இவ்வாறு பாடுகிறார்.