ராணி எஸ்தர்

ராணி எஸ்தர்
Updated on
1 min read

ஒரு சாமானியப் பெண் எப்படி அரசியாகி, சூழ்ச்சிகளில் இருந்தும், அழிவுகளில் இருந்தும் தன்னையும், தன் இனத்தையும் காப்பாற்றிக் கொண்டாள் என்பதே ராணி எஸ்தரின் கதை.

முதலாம் பெர்சிய ஆட்சிக்காலத்தில், மாமன்னர் அகஸ் வேருவின் மனைவியான வஸ்தி மன்னரின் கட்டளைகளைப் புறக்கணித்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டபின், மன்னரின் மனைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அழகான யூதப் பெண்ணே எஸ்தர் ஆவாள்.

எஸ்தரின் உண்மையான பெயர் அதஸா. அவளை வளர்த்தவராகிய மொர்தெக்காயின் ஆணைப்படி எஸ்தர் தன் இனத்தை வெளிப்படுத்தவில்லை. ஒருமுறை அரண்மனைக் காவலர்கள் இருவர் மன்னரைக் கொல்ல ஏற்பாடுகள் செய்வதை அறிந்த மொர்தெக்காய், மன்னரிடம் அதைத் தெரிவித்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in