துபாயில் வசந்த உற்சவம்

துபாயில் வசந்த உற்சவம்
Updated on: 
1 min read

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இணைந்து, துபாயில் ஜபீல் மகளிர் மன்றத்தில் வசந்த உற்சவம் - 2026 நிகழ்ச்சியை நடத்தின.

இசை, நடனத் திருவிழாவாக அமைந்த இந்நிகழ்ச்சி இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் கலைஞர்களையும் ரசிகர்களையும் ஒன்றிணைத்தது.

துபாயிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதிநிதி ஆஷிஷ் குமார் வர்மா, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் டாக்டர் முகமது சயீத் அல் கிந்தி ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

Loading content, please wait...

X