செந்தமிழ் வேதம் | நூல் அறிமுகம்

செந்தமிழ் வேதம் | நூல் அறிமுகம்
Updated on
1 min read

திருவாய்மொழி நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்டது. வட மொழி வேதாந்தங்களில் தோன்றும் சந்தேகங்களுக்கு திருவாய்மொழி தகுந்த விளக்கம் அளிக்கிறது.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் கொண்டு, ஆசூர் டி.எஸ்.ராமஸ்வாமி எளிய நடையில் திருவாய்மொழிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று மதுரகவி கேட்க, ‘அத்தை தின்று அங்கே கிடக்கும்’ என்று திருவாய் மலர்ந்த நம்மாழ்வாரின் பாசுரங்களின் தொகுப்பான திருவாய் மொழிக்கு சுவை குன்றாமல் விளக்கம் அளித்துள்ளார் ஆசிரியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in