

கலாச்சாரம், தனி மனித ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்துள்ள இலங்கையில் பௌத்த மதத்தினர் 65%, இந்துக்கள் 15%, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் தலா 10 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.
இராமாயணத்தில் பல சம்பவங்கள் இலங்கையிலேயே நிகழ்ந்ததால், அங்குள்ளவர்களுக்கு, இக்காட்சிகள் பரிட்சயமானதாகவே உள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவிகரமாக, ‘இன்பம் தரும் இலங்கை யாத்திரை’ என்ற வழிகாட்டி நூலை கே.சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
அனுராதபுரம் நகரம், மகா போதி மரம், கண்டி கதிர்காம ஆறுமுகன் கோயில், புத்தர் கோயில், கால் கோட்டை, விபீஷணர் கோயில், கொழும்பு நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், சீதா ஏலியா அசோகவனம், திருகோணமலை, திருக்கேதீச்சுரம், நகுலேசுவரம், நைனா தீவு நாகபூஷணி அம்மன் கோயில், நுவரேலியா காயத்ரி பீடம், வெள்ளவத்த பதி பசு பாசம் கோயில் உள்ளிட்ட இடங்களின் சிறப்பு, அவற்றுக்கு செல்லும் வழி ஆகியன குறித்து இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.