

கந்த சஷ்டி என்பது சூரனை முருகன் வெற்றி கொண்ட நாள் ஆகும். சூரனை வெல்வதற்காக போர் தொடங்கிய ஆறாம் நாளில் வெற்றி பெற்றதைத்தான் கந்த சஷ்டி குறிக்கிறது.
சஷ்டி என்பது ஆறு எனும் பொருள் கொண்டது, அந்த வெற்றி நாளின் பெயரில் முருகனைப் போற்றி, அவனது அருள்வேண்டிப் பாடிய பாடல் கந்த சஷ்டி கவசம் எனப்படுகிறது. கவசம் என்பது மேலுறையைக் குறிக்கும். போருக்கு போகும் வீரர்கள் மார்பில் கவசம் எனும் உறை அணிந்து செல்வர்.