கல்விச் செல்வம் அருளும் வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்

கல்விச் செல்வம் அருளும் வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

சேலத்தில் இருந்து 78 கிமீ தூரத்தில் உள்ள வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோயில் கல்விச் செல்வம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. சிறந்த ஞானம் பெறுவதற்காக இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் வெண்கல ஊர் என்று அழைக்கப்படும் ஊரில் வசித்த குறுநில மன்னர்கள் 2 பேர், சிவபெருமானின் மீது அதீத பக்தியுடையவர்களாக இருந்தனர். இருவரும் பிரதோஷ வேளையில், விருத்தாசலத்திலுள்ள விருத்தாசலேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒருசமயம் அவர்கள் பிரதோஷ பூஜைக்கு சென்றபோது கனத்த மழைபெய்தது. வழியில் இருந்த ஸ்வேத (குடமுருட்டி) நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவர்களால் நதியை கடக்க முடியவில்லை. பிரதோஷ நேரம் நிறைவு பெறுவதற்குள் ஈசனை தரிசிக்க வேண்டுமே என்று கவலை அடைந்து அவரிடம் முறையிட்டனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in