

வாரணாசி வருபவர்கள் கண்டிப்பாக பார்க்கும் கோயில்களில் ஒன்றாக துளசி மானச மந்திர் விளங்குகிறது. அழகும், கலாச்சார பிம்பமும் இதற்குகூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. துர்கா மந்திருக்கு அடுத்து துர்கா குந்த் பகுதியில் எழுந்துள்ள இந்தக் கோயில் ராமருக்காக எழுந்த கோயில் ஆகும்.
16-ம் நூற்றாண்டில் துறவி, சீர்திருத்தவாதி மற்றும் தத்துவஞானி என அழைக்கப்பட்ட கோஸ்வாமி துளசி தாசரால் ராமாயணம் இந்தி மொழியில் எழுதப்பட்டது. ராம சரித மானஸ் என்றால் ராமர் செயல்களின் ஏரி எனப் பொருள்.