

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள யக்ஞேஸ்வரர் கோயில், கல்வி, கலைகளில் வெற்றி அருளும் தலமாகப் போற்றப்படுகிறது.
தலவரலாறு: படைப்புத் தொழில் செய்த பிரம்மா, சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்ததால், தன்னையும் சிவனுக்கு இணையாகக் கருதி ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தை அடக்க சிவன், அவரது ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளினார். தவறை உணர்ந்த அவர், மன்னிப்பு வேண்டி ஒரு யாகம் நடத்த விரும்பினார்.