

மதுரையில் இருந்து 33 கிமீ தூரத்திலும், உசிலம்பட்டியில் இருந்து 15 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள திடியன் மலையில் வீற்றிருக்கும் கைலாசநாதரை வழிபட்டால் கிரக தோஷங்கள், பேச்சு கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு: இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின்போது, பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்கெல்லாம் ஓய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஓர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டது.
அவ்வாறு ஒருநாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தனியே கோயிலைக் கட்டி வழிபாடு நடத்தினர்.
மூலவர்: கைலாசநாதர்