எதிரிகளை வீழ்த்த அருள்புரியும் பெரும்பேர் கண்டிகை சுப்பிரமணியர்

எதிரிகளை வீழ்த்த அருள்புரியும் பெரும்பேர்  கண்டிகை  சுப்பிரமணியர்
Updated on
2 min read

குன்று இருக்குமிடம் எல்லாம் குமரன் கோயில் கொண்டிருப்பார் என்பதற்கு ஏற்ப செங்கை மாவட்டம் பெரும்பேர் கண்டிகையில் முருகப் பெருமான் சத்ரு சம்ஹார சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார். இலக்குவன் மூர்ச்சையானதும், அவரை எழுப்புவதற்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை பெயர்த்து கொண்டு வந்தார்.

அப்போது தற்செயலாக சிதறி விழுந்த சிறு மலைக் குன்றே தற்போது பெரும்பேர் கண்டிகையில் உள்ள சஞ்சீவி மலை என்று கூறப்படுகிறது.

திரிபுராந்தக சம்ஹாரத்துக்காக ஈசன் வான்வெளியில் ரதமேறி விரைந்து கொண்டிருக்கிறார். முன்னதாக விநாயகப் பெருமானை வழிபடாமல் வந்ததால், தேரின் அச்சு முறிந்துவிடுகிறது.

இச்சம்பவம் நடைபெற்ற இடம் அச்சிறுபாக்கம். இதுகுறித்து கேள்விப்பட்ட முருகப் பெருமான் தந்தையைக் காண வருகிறார்.

அவர் தங்கிய இடமே சஞ்சீவி மலை ஆகும். ஈசனின் மணக்கோலம் காண விழைந்த அகத்தியர் முதலில் இந்த முருகப் பெருமானை வணங்கிச் செல்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in