ஆனந்த ஜோதி
வழக்குகளில் வெற்றி அருளும் மடப்புரம் காளி | பரிகார ஸ்தலங்கள்
மதுரையிலிருந்து 19 கிமீ, சிவகங்கையிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், 1,000 ஆண்டுகள் பழமை கொண்டதாக விளங்குகிறது. பலருக்கு குலதெய்வமாக விளங்கும் அம்மன், செய்வினை, பில்லி சூன்யம் ஆகியவற்றை தீயாக பொசுக்கிவிடுவதாக போற்றப்படுகிறாள்.
தல வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்து மதுரையை வளைத்தார்.
