

பார்வதி சுயம்வர விருட்சம்
அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இருப்பினும் அவர்களுள் ஒரு சிலர், சீதையின் பெயருக்கு களங்கம் உண்டாகும்படி அவதூறாகப் பேசினர்.
சீதையின் கற்பை நிரூபிக்க வேண்டி, ராமபிரான் அவளை கானகத்துக்கு அனுப்பினார். வால்மீகி முனிவர், கர்ப்பிணியாக இருந்த சீதைக்கு ஆதரவு கொடுத்து, தனது ஆசிரமத்தில் தங்க வைத்தார். லவன், குசன் ஆகிய மகன்களைப் பெற்றெடுத்தாள் சீதை.
ராமபிரான்தான் தங்களது தந்தை என்பதை அறியாமல் லவகுசர்கள் வளர்ந்தனர். அந்த சமயம் அஸ்வமேத யாகம் நடத்தினார் ராமபிரான். அஸ்வமேத யாக குதிரை, லவகுசர்கள் இருக்கும் இருப்பிடத்துக்கு வந்தது.
லவகுசர்கள் குதிரையைக் கட்டிப் போட்டு, அதனுடன் வந்த சத்ருக்கனன், லட்சுமணன் ஆகியோரை வென்றனர். விஷயத்தை அறிந்த ராமபிரான், ஒற்றனை அனுப்பி, வால்மீகி முனிவரையும் சீதையையும் அயோத்திக்கு அழைத்து வரப் பணித்தார்.