திருமண தடை நீக்கும் கரையபுரம் கரவீரநாதர் | பரிகார ஸ்தலங்கள்

திருமண தடை நீக்கும் கரையபுரம் கரவீரநாதர் | பரிகார ஸ்தலங்கள்

Published on

தல வரலாறு: முன்னொரு காலத்தில் தேவகன்னியர் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம், "தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவராக உள்ளார். குழந்தைகளும் உள்ளன. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்” என வேண்டினர்.

அதற்கு பார்வதி தேவி சிவனிடம், “இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்” என வேண்டினாள். உடனே சிவ பெருமான் காவிரியின் தென்கரையில்தானே லிங்கம் அமைத்து கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்ய கூறினார்.தேவ கன்னியரும் அதன்படி செய்து பலனடைந் தனர்.

எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து இங்குள்ள தலவிருட்சத்தில் நீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாக நடக்கும் என்பது ஐதீகம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in