பில்லி, சூனியம் களையும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் | பரிகார ஸ்தலங்கள்

பில்லி, சூனியம் களையும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

அரக்கோணத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோயில், பில்லி, சூன்யம் களையும் தலமாகப் போற்றப்படுகிறது. கடிகாசலம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

மூலவர்: யோக நரசிம்மர்.

தாயார்: அமிர்தவல்லி

விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் சோளிங்கர் மலையில் இருந்து பெருமாளை வழிபட்டு பிரம்மரிஷி பட்டம் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டும் என்று வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்துவாஜர் ஆகிய முனி சிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்தலத்தில் தவமிருந்துள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in