

ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டிருப்பது நம் மனதின் இயல்பு. மனம் இப்படி அலையாமல் இருக்க வேண்டும் என்றால், அது நிலைபெற நமக்குள்ளே ஓர் இடம் வேண்டும். வெளியில் இருப்பதை விட தன்னுள் இருப்பது உண்மையானது, இனிமையானது என்று மனம் நம்பினால், அலைபாயுதல் அடங்கும். ஆன்மாவை அறியும்.
புற விருப்பங்களின்று விலகும்போது ஆன்மா இறைவனை நோக்கி செல்லும். ஆன்மாவால் மரணமற்றவன் ஆகிறான் மனிதன். ஒருவர் ஆன்மாவை உணர அடிப்படைத் தேவைகள், விடா முயற்சி, சுய ஆராய்ச்சி, உண்மையை ஒப்புக் கொள்ளுதல், துணிவு, பற்றற்ற தன்மை, குருவின் அருள், மன உறுதி, நல்லொழுக்கம், புலன்கள் மீது பற்றின்மை, தியானம், அமைதி, மௌனம், வழிபாடு, மாயையை உணர்ந்து அதனின்று வெளிப்படுதல், வாழ்க்கையே நான் என்பதை இயல்பாக உணர்தல் என்று கடோபநிஷத் கூறுகிறது.
ஆன்மா அழிவற்றது. அது தனித்தன்மைக்குள் இருக்கிறது. ஆன்மா பிரம்மத்துக்குள் இருக்கிறது. இதை உணர்தலும், அறிதலும்தான் ஞானநிலையாகக் கருதப்படுகிறது.
ஆச்சாரிய வினோபா பாவேயிடம் ஒருவர் வந்து ஆசி வேண்டினார். அவரும் ஆசி அருளினார். “நரேந்திரனை ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார். அவருடைய கைபட்டதுமே அகமலர்ச்சி ஏற்பட்டு நரேந்திரன் விவேகானந்தர் ஆனார்.