

சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 20 கிமீ தொலைவில் உள்ள சாயா வனத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், மன உறுதி அருளும் ஈசனாக வழிபடப்படுகிறார். எதிரிகளை வெல்ல, வில்லேந்திய வேலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
தல வரலாறு:
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான்.
அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள்.