மனக்குழப்பம் தீர்க்கும் சங்கரன்கோவில் சங்கர நாராயணர்

மனக்குழப்பம் தீர்க்கும் சங்கரன்கோவில் சங்கர நாராயணர்
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஈசனும் பெருமாளும் ஒன்றாக அருள்பாலிக்கின்றனர். சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக அருள்பாலிக்கும் சந்திரமவுலஸ்வரருக்கு அபிஷேகம் உண்டு. சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.

சங்​கன் என்ற நாக அரசன், ஈசன்​மீது தீராத பக்தி கொண்​டிருந்​தான். அதே​போல் பது​மன் என்ற மற்​றொரு நாக அரசன் திரு​மால் மீது தீராத பக்தி கொண்​டிருந்​தான். இரு​வருக்​கும் சிவன், திரு​மால் இரு​வரில் யார் பெரிய​வர் என்ற விவாதம் எப்​போதும் எழும்.

ஒரு​முறை விவாதம் முடிவுறாத நிலை​யில் இருக்​கும்​போது, சங்​கன், பது​மன் இரு​வரும், பார்​வ​தி​யிடம் முறை​யிட்​டு, தங்​கள் விவாதத்​துக்கு சரி​யான தீர்ப்பு வழங்​கு​மாறு வேண்​டினர்.

ஈசன், திருமால் இருவருமே சமசக்தி கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு (சங்கன், பதுமன்) தெரிவிக்க, ஈசனும் திருமாலும் இணைந்து காட்சி அளிக்க வேண்டும் என்று தவம் இருந்தாள்.

பார்வதியின் தவத்தை மெச்சி, ஈசனும் திருமாலும் இணைந்து சங்கர நாராயணராக தோன்றி அருள்பாலித்தனர். பின்னர் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்க சங்கரலிங்கமாக எழுந்தருளினார் சிவன். அன்று முதல் சங்கரலிங்கத்தை இரு நாக அரசர்களும் வழிபட்டு வந்தனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in