

தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள புவனகிரியில், திம்மண்ண பட்டர் - கோபிகாம்பாள் தம்பதிக்கு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் 1598-ம் ஆண்டு அவதரித்தார்.
வேங்கடநாதன் என்ற இயற்பெயர் கொண்ட அவரது பதினெட்டாம் வயதில், பன்னிரெண்டு வயதான சரஸ்வதி அம்மையாருடன் விவாகம் நடந்தது. தமது குருவான சுதீந்திர தீர்த்தரை அடிபணிய விரும்பி, மனைவியுடன் கும்பகோணம் வந்தடைந்து, குருவிடம் தீவிரமாக கல்வி கற்கத் தொடங்கினார்.
மத்வ சித்தாந்தத்தை விளக்கும் கிரந்தங்களை படித்து புலமை பெற்றார். பல அறிஞர்களுடன் ஆன்மிக விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இசையிலும், வீணை வாசிப்பிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.