

இராமாயணம் உலகம் முழுவதும் பயணிக்கிறது. இராமாயண நாயகனும், நாயகியும் மக்களின் மனங்களில் பயணிக்கின்றனர். வருங்காலத் தலைமுறைக்கான சொத்தாகவும், எதிர்கால வாழ்க்கைக்கான செம்மையாகவும் இராமன் போற்றப்படுகிறான்.
பதினான்கு ஆண்டுகள் - பாரதத்தின் பற்பல பகுதிகளில் இராமன் நடந்தான்; சீதை பின் தொடர்ந்தாள். மண்ணில் மட்டுமா இவர்களின் காலடிகள் பட்டன? மக்களின் மனங்களைத் தொட்டு, உணர்வுகளில் கலந்து, உயிரோடும் நினைவோடும் ஒன்றாகிச் சேர்ந்து விட்டன.