

உலகம் முழுவதும், ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான இராமாயணங்கள் தோன்றின. இராமாயண நாயகன் ஒவ்வோர் இல்லத்திலும் செல்லப் பிள்ளையாகவே வலம் வந்து ஆனந்தம் அருள்கிறான். குஜராத்தி வட்டாரங்களில், மாலைகளிலும் முன்னிரவுகளிலும் முற்றங்களில் அமர்ந்து இராமகாதையை வாசித்தும் கேட்டும் இருக்கிறார்கள்.
கதை நிகழ்வுகளையும் கருத்துகளையும் தத்தம் முறையில், புலவர்களும் பண்டிதர்களும் எடுத்துக் கூறியுள்ளனர். இவ்வகையில், யுத்த காண்டப் பகுதியை, இராம யக்ஞம் என்னும் பெயரில், குறுங்காப்பியமாகவே பிரேமானந்தர் படைத்துள்ளார்.