

உலகம் முழுவதும் இராமாயணம் பயணித்துள்ளது. விதவிதமான இராமாயணங்களில், ஒரே காட்சி வர்ணிக்கப்பட்டாலும், அவற்றில் உள்ள கருத்தும் களிப்பும் அதன் சுவாரசியத்தைக் கூட்டி, நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
கானகம் சென்ற இராமன், சீதை, இலக்குவன் ஆகியோரை கங்கை ஆற்றின் வடகரையிலிருந்து தென் கரைக்குக் கொண்டு சேர்த்தவன் குகன் என்னும் படகோட்டி. ச்ருங்கி வேரபுரத்தின் தலைவனாகவும் படகுகள் பலவற்றுக்குச் சொந்தக்காரனாகவும் இருந்த குகன், இராமன் மீது நிறைந்த அன்பு பூண்டவன்.