

இராமாயண காவியம் உலகம் முழுவதும் பல மொழிகளில் உள்ளது. அனைத்தும் சிற்சில மாற்றங்களுடன் சுவைபட இயற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நொடியும் இராமனை நினைப்பதும், இராமநாமம் கேட்பதும் பெரும் பேறுதான். அதுவே சுகமாகவும், களிப்பைத் தருவதாகவும் உள்ளது என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.
மலையாளத்தில், துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனுடைய அத்யாத்ம ராமாயணக் கிளிப்பாட்டு வெகு பிரசித்தம். கற்கிடக (கடக மாதம் = ஆடி மாதம்) மாதம் இராமாயணம் ஓதும் மாதமாகப் போற்றப்படுகிறது.
(இராமாயண மாதம் என்றே பெயர்); இந்த மாதத்தில், வீடுகளிலும் கோயில்களிலும் கிளிப்பாட்டை ஓதுவது வழக்கம். சிவன் - பார்வதி உரையாடலில் வரும் இராம காதையைக் கிளியொன்று எடுத்துரைக்கிறது.
ஸ்ரீ ராம நாமம் பாடி வந்ந பைங்கிளிப் பெண்ணே
ஸ்ரீ ராம சரிதம் நீ சொல்லீடு மடியாதே
சாரிக பைதல் தானும் வந்திச்சு வந்த்யன்மாரே
ஸ்ரீ ராம ஸ்துதியோடே பறஞ்ஞு துடங்ஙினாள்