

இராமனுக்கும் சீதைக்கும் வெகு கோலாகலமாகத் திருமணம் நடந்தது. இது தெரியாதா? தெரியும். ஆனாலும், இந்த இடத்தில் ஓர் ஐயம். தம்மிடமிருந்த சிவ தனுசை நாணேற்றுபவருக்குத்தான் சீதையைத் திருமணம் செய்யும் தகுதி என்பதாக ஜனக மன்னர் ஏன் தீர்மானித்தார்?
சீதையானவள், அழகோ அழகு – உவமையே சொல்லமுடியாத அளவுக்கு அழகு.
மிஞ்சு காதிதி முத்து மேடிர ஹம்ஸ
ஹம்ஸ காதிதி நம்ருத முகல ஸோன
ஸோன காதிதி க்ரம்முஜுண்டியு தேன
தேன காதிதி சால தீரைன செலுவ
செலுவ காதிதி விகஸிஞ்சு செங்கலுவ
கலுவ காதிதி நல கந்தர்ப சரமு
சரமு காதிதி வாணி ஸவரிஞ்ச வீண
வீண காதிதி ஸர்வ வித்யல ஜான
அழகானவள் – இல்லையில்லை, இவள் அன்னம்; அன்னமா – இல்லையில்லை இவள் சோம லதை; சோம லதையா – இல்லையில்லை, இவள் தேன்; தேனா – இல்லையில்லை, இவள் தேன் ததும்பு தாமரை; தாமரையா – இல்லையில்லை, இவள் நீலோற்பலம்; நீலோற்பலமா – இல்லையில்லை, இவள் மன்மதச் சரம்; சரமா – இல்லையில்லை, இவள் சரஸ்வதியின் வீணை; வீணையா – இல்லையில்லை, இவள் சகல வித்தையுமாவாள்.