குபேரன் குடியிருந்த இடம் | இராம கதாம்ருதம் 55

குபேரன் குடியிருந்த இடம் | இராம கதாம்ருதம் 55
Updated on: 
2 min read

இராமாயணக் கதை வெகுவாகப் பரிச்சயம் என்றாலும், ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர்களும் வாழ்க்கை விவரங்களும் அவ்வளவாகத் தெரிந்திருக்காது. சிலவற்றுக்கு மட்டுமே விடை தெரியும். சிலவற்றை நாம் அறிய விரும்புவதும் இல்லை.

சில செய்திகளை அறியும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இலங்கை நகரத்தை யார் கட்டியது? இராவணன் கட்டினானா? இல்லையென்றால், எப்படி அங்கே அவன் ஆட்சி நடத்தினான்? ஏன் அவனை யாரும் விரட்டவில்லை? மேற்குறிக்கப் பெற்றுள்ள வினாக்களை நம்முடைய உள்மனம் கேட்டாலும், விடை தெரியாமல் அவற்றை ஒதுக்கி விடுகிறோம்.

இத்தகைய வினாக்களுக்கான விடைகளை, இராமாயணத்தின் உத்தர காண்டப் பகுதிகளில் காணலாம். இராவணனுடைய போலித்தனத்தையும் அட்டூழியத்தையும் எண்ணிப் பார்க்கும் இராமன், இப்படியெல்லாம் ஒருவன் நடந்து கொண்டானே, எப்படி அவனுக்கு அனைத்துவிதமான வசதிகளும் கிட்டின என்று விசனப்படும்போது, இராவணன் மற்றும் அவனுடைய குலத்தோர், முனிவர்களும் தவசிகளும் தவித்த தவிப்பு, தர்ம வழிமுறைகள் போன்றவற்றை விளக்கமாக அகத்தியரும் பிற முனிவர்களும் எடுத்தியம்புகிறார்கள் என்பதே உத்தர காண்டத்தின் பிரதான பகுதி எனலாம். கம்பராமாயணக் காப்பியம், இராம பட்டாபிஷேகத்தோடு நிறைவடைந்துவிடும்.

Loading content, please wait...

X