மிதிலையின் மைிதிலி | இராம கதாம்ருதம் 43

மிதிலையின் மைிதிலி | இராம கதாம்ருதம் 43
Updated on
2 min read

இராமகதையின் பல்வேறு வகையான நுண்கதை மாற்றங்களில், சீதையானவள் இராவணனின் மகள் என்னும் மாற்றமும் ஒன்றாகும். பௌமசர்யு, சங்கதாசரின் வாசுதேவ ஹிண்டி போன்ற காப்பியங்களில் தொடங்கும் ‘இராவணன் மகள்’ என்னும் தொன்மம், ஆனந்த இராமாயணம், அத்புத இராமாயணம் போன்ற நூல்களிலும், ஆங்காங்கே வழங்கும் நாட்டு வழக்காறுகளிலும் மேலும் விரிவடைந்தது.

இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த குழந்தை, காட்டில் இராவணனுக்குக் கிட்டிய நவரத்தினங்களிலிருந்து உருப்பெற்ற பெண் குழந்தை, முற்பிறவியில் வேதவதியாக இருந்து தவம் செய்த பெண்ணுடைய சாம்பலிலிருந்து உருவான குழந்தை என்று வெவ்வேறு வகையான கதைப் போக்குகள், இந்தத் தொன்மத்தைச் சுற்றிலும் விரிந்துள்ளன.

வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டம், இதனைச் சற்று விளக்கமாகவே காட்டுகிறது. உலகமெங்கும் சுற்றித் திரிந்தான் பத்துத் தலையன். இமயமலைச் சாரலுக்கு வந்தபோது, மான் தோலணிந்து, ஜடாபாரங்கள் தொங்க, ஆழ்ந்த தவத்தில், அதே நேரம், மென்மையான அழகோடு காணப்பெற்ற பெண்ணொருத்தியைப் பார்த்தான்.

கிம் இதம் வர்தஸே பத்ரே, விருத்தம் யௌவனஸ்ய – என்ன செய்கிறாய், பெண்ணே, உன்

இளமைக்கு (இத்தவம்) விரோதமானது என்று பேச்சைத் தொடங்குகிறான். தன் கதையை அவளும் உரைக்கிறாள். பிருஹஸ்பதி என்னும் தேவரிஷியின் மகனான குசத்வஜரே, அவளுடைய தந்தை. சிறந்த தவசீலர். அவர் செய்த யாகங்களின் பயனாக, வேதங்களின் மறுவடிவமாகவே பெண் பிறந்தாள். எனவே அவளுக்கு வேதவதி என்று பெயர். இயக்கர்களும் பன்னகர்களும் இன்னும் பலரும் அவள் கரம்பிடிக்கக் கேட்டனர். எனினும், திருமாலுக்கே அவளை மணமுடிப்பதாக அவர் உறுதிபூண்டார்.

சம்பூர்நாம ததோ ராஜா தைத்யானாம் குபிதோபவத்

தேன ராத்ரௌ சயானோ மே பிதா பாபேன ஹிம்ஸித:

முனிவரின் உறுதியைச் செவியுற்ற அரக்க அரசன் சம்பு என்பான், சினமுற்று, இரவில் உறங்கிக் கொண்டிருந்த அவரைக் கொன்றுவிட்டான். பெண்ணின் தாயும், கணவரின் உடலை ஏந்தியபடி நெருப்பில் புகுந்துவிட்டாள். தனித்துவிடப்பட்ட வேதவதி, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக திருமாலை எண்ணித் தவம் செய்கிறாள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in