

பாரத தேசத்து மக்கள் அனைவரின் உள்ளங்களையும் இராம கதை கொள்ளை கொண்டுள்ளது என்பதை பல்வேறு வகையில் உணரலாம். ஒவ்வொருவர் வீட்டிலும் இராமனும், சீதையும் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை இராமனாகவும், சீதையாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். நம் தேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான திருமணச் சடங்குகள் உள்ளன. சடங்குகளோடு இணைந்த திருமணப் பாடல்களும் உள்ளன.
கண்ணனுக்கும் ராதைக்கும் ஏராளமான காதல் பாடல்கள் இருக்கும் வட்டாரங்களில் கூட, திருமணப் பாடல்கள் என்பவை இராமனையும் சீதையையும் வைத்தே அமைந்துள்ளன. வங்காளம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், ஒவ்வொரு மணமகனும் இராமனாகவும், ஒவ்வொரு மணப்பெண்ணும் சீதையாகவுமே பார்க்கப்படுகிறார் கள்.