தனித்துவமிக்க திரிசடை | இராம கதாம்ருதம் 28

தனித்துவமிக்க திரிசடை | இராம கதாம்ருதம் 28
Updated on
2 min read

பாரத தேசத்தில் அல் லாமல், பிற நாடுகளிலும் பகுதிகளிலும் காணப்படும் இராம கதைகளில் முக்கியமானது, பழைய ஜாவனீய (இ)ராமாயணம் என்றழைக்கப்படும் (இ)ராமாயண காகவின் என்பதாகும். பழைய ஜாவனீய (அல்லது காவி) மொழியில் இயற்றப்பட்டுள்ள இக்காவியம், காகவின் முறையில் அமைந்திருக்கிறது. சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் போன்ற செய்யுள்களால் அமைக்கப்படும் நீள்காவியத்துக்கே ‘காகவின்’ என்று பெயர்.

9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ 10-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ இக்காவியம் இயற்றப்பட்டிருக்கக் கூடும். ஜாவனீய, இந்தோனீசிய மக்களைப் பொறுத்தவரை, கலை வெளிப்பாட்டின் உச்சம்தான் (இ)ராமாயண காகவின் என்றே கருதப்படுகிறது. எனினும், இதனை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சம்ஸ்கிருத மகா காவியங்களில் ஒன்றான பட்டி காவியத்தை (பட்டி காவியம், இராம கதையையே பேசுகிறது) அடியொற்றியதாக இருந்தாலும், ஆங்காங்கே சில மாற்றங்களையும் காகவினில் காணலாம். எல்லாவற்றிலும் மேலானவளாக, தனித்துவம் மிக்கவளாகக் காகவின் திரிசடை மிளிர்கிறாள்.

இராவணன் இறந்துவிட்டான். இராமனிருக்கும் இடத்துக்கு சீதை அழைத்து வரப்படுகிறாள். முகங்கொடுக்காதது மட்டுமில்லை, புண்படுத்தும் சொற்களை அள்ளி வீசுகிறான் இராமன். ‘மக்கள் என்னை மதிக்க வேண்டுமெனில், உன்னை நான் பிரியவேண்டும்.

நீ இருந்தால், என் கௌரவம் பாழடையும்’ என்றெல்லாம் சீதையை எள்ளி எற்றுகிறான். எந்தவிதமான ஐயத்துக்கும் இடமின்றித் தன் நிலையை அவன் உரைத்துவிட, சீதையோ சிதைவுறுகிறாள். ‘ரகுகுலத்தவரே, தங்களுக்கு அரசநீதியும் நியாய தர்மமும் நன்கு தெரியும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in