

வீடணனுக்கு அடைக்கலம் கொடுத்து ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா என்னும் விவாதம் நடக்கிறது. இராமன்பக்கம் இருக்கும் சுக்ரீவனும்வானர வீரர்கள் சிலரும் வேண்டாம் என்று கூறுகின்றனர். பகைவனுடைய சகோதரன் என்பதுதான் அவர்களுடைய முக்கியமான வாதம்.
யாராக இருந்தாலும், உதவியை நாடி, அதுவும் அடைக்கலம் என்று வந்திருக்கும் ஒருவனைப் புறந்தள்ளலாகாது என்பதை நயமாகவும், ஆனால் உறுதியாகவும் கூறவேண்டும். பறவை ஒன்று நடந்துகொண்ட விதத்தை இதற்கான எடுத்துக்காட்டாக இராமன் விளக்குவான்.
ஸ்ரூயதேஹி: கபோதேன: சத்ருச் சரணம் ஆகத:
அர்ச்சிதஸ்ச யதா ந்யாயம் ஸ்வைஸ்சமாம்ஸைர்
நிமந்த்ரித:
ஸஹிதம் ப்ரதி ஜக்ராஹ பார்யாஹர்தாரம் ஆகத:
கபோத: கிம்புன: மத்விதோ ஜன:
என்றே இராமன் வினவுவதாக, இக்காட்சியை வால்மீகி அமைப்பார். ‘பாதுகாப்புத் தேடி வந்த பகைவனுக்கு, எந்த அசூயையும் காட்டாமல், நெறிமுறையின் படி, தன்னுடைய தசையையே அளித்த புறாவைப் பற்றி நீ கேட்டதுண்டா? (வானர வீரனே) தன் துணையைக் கொண்டுபோன வேடுவன், தன்னருகே வந்தபோது, அவனை வரவேற்றுப் பாதுகாத்தது புறா.
இதைவிட அதிகமாக மனிதன் நான் என்ன செய்ய?’ என்பதுதான் இராமனின் வினா, ஆதங்கம், உறுதிப்பாடு. இதையே கம்பரின் இராமனும் பேசுவான்: பேடையைப் பிடித்து, தன்னைப் பிடிக்க வந்து