குழந்தை பாக்கியம் அருளும் புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி | பரிகார ஸ்தலங்கள்

குழந்தை பாக்கியம் அருளும் புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி | பரிகார ஸ்தலங்கள்
Updated on
2 min read

பார்வதி தேவியும் சிவபெருமானும் மேல்மலையனூருக்கு பூங்காவனம் (தற்போது புட்லூர் என்று அழைக்கப்படும் பகுதி) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நீண்ட தூரம் நடந்து களைப்படைந்ததால் வேப்பமர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்க, உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியைத் தாண்டிச் சென்று புனித நீர் எடுத்து வந்தார்.

அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமானால் நதியைக் கடந்து வர இயலவில்லை.

எனவே வெள்ளம் குறையட்டும் என்று காத்திருந்தார். இதற்கிடையே பசி தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட அவரைச் சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்துவிட்டது.

இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த ஈசன், புற்றுக்குள் பார்வதி அமர்ந்துவிட்டதை அறிந்து அங்கேயே நின்றுவிட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான் தாண்டவராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதைக் காணலாம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in