சோழ மன்னனுக்கு ‘கை தந்த பிரான்’

சோழ  மன்னனுக்கு ‘கை தந்த  பிரான்’
Updated on
1 min read

கரிகாலப் பெருவளத்தான் மன்னனுக்கு அருள்பாலித்த தலமாக விளங்கும் திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில், சென்னையிலிருந்து 26 கிமீ தொலைவில் திருவள்ளூர் – திருத்தணி - திருப்பதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் சோழ மன்னன் கரிகாலப் பெருவளத்தான், திருமழிசை அருகிலுள்ள மற்றொரு தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான்.

அப்போது அங்கு வளர்ந்திருந்த கொடியில் யானையின் கால் சிக்கிக் கொண்டது. அந்த கொடியை கையால் எடுக்க முடியவில்லை.

எனவே, மன்னன் தனது உடைவாளைக் கொண்டு அந்தக் கொடிகளை வெட்டினான். அப்போது கொடியின் அடியிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in