

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து தெற்குத் திசையில் 4 கிமீ தூரத்தில் துரையசபுரம் அருகே உள்ள கீழ்காத்தி காதமறவர் காளி கோயில் ஐஸ்வர்யம் அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள், சேலைத் தலைப்பை கிழித்து மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
ஒரு காலத்தில் கீழ்காத்தி கிராமத்தில் பெரிய மறவர், சின்ன மறவர் என்ற சகோதரர்கள் இருந்தனர். ஊருக்குள் இருந்த கருப்பர் கோயிலின் கடாவெட்டுத் திருவிழாவில் வெட்டப்படும் கடாவின் மாமிசத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்வது அவர்களது வழக்கம். இதில் பெரிய மறவரது வீட்டில் ஆட்கள் குறைவு என்பதால், ஒரு முறை அவருக்குச் சற்றுக் குறைவான மாமிசத்தைக் கொடுத்தார்கள்.
இதனால் அடுத்த வருட கடாவெட்டின்போது பெரிய மறவர், கோயிலுக்கு வரவில்லை. கிடாவை வெட்ட வேண்டிய பெரிய மறவர் வராததால் பூஜை போட முடியவில்லை.