திருமணத் தடை நீக்கும் ஆத்தூர் தலையாட்டி விநாயகர் | பரிகார ஸ்தலங்கள்

திருமணத் தடை நீக்கும் ஆத்தூர் தலையாட்டி விநாயகர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on: 
1 min read

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ள தலையாட்டி விநாயகர் கோயில் திருமணத்தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. புத்திர பாக்கியம் பெற, கிரக தோஷங்கள் விலக இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி ஈசனின் அருள் பெற்றார்.

அவர் ஆத்தூர் தலம் வந்து தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in