

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில், பூர்வ ஜென்ம பாவம் விலக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. நாக தோஷம் நீங்க இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மேலஆதனூர் கிராமத்தில் பிறந்த நந்தனார் மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை.
அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒருநாள் சிதம்பரம் செல்லும்போது திருப்புன்கூர் தலத்துக்கு வருகிறார். அப்போது அவர் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது.