

அரியலூர் நகரிலிருந்து கிழக்கே இரும்புலி கிராமம் செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயில், விவசாயம் செழிக்க அருளும் தலமாகப் போற்றப்படுகிறது. கால்நடைகளின் ஆரோக்கியத்துக்காக இங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே, வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது.
மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் இறைவன் தோன்றி, “கவலைப்படாதே பக்தா! காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மகாலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது.