

விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த காலகட்டம். மன்னர் ராமராயரின் படைத்தளபதி விட்டல் தேவராயர் என்பவர் தனது பரிவாரங்களுடன் தாமிரபரணி நதிக்கரை ஊர்களில் முகாமிட்டிருந்தார்.
ஒவ்வொரு ஊராக பார்வையிட்டு தனது அரசு அலுவல்களை மேற்கொண்டிருந்தார். இவர் மகாராஷ்டிராவில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாண்டுரங்க விட்டலரின் அதிதீவிர பக்தர். பாண்டுரங்கனை வழிபட்ட பின்னரே தனது அன்றாட அலுவல்களைத் தொடங்குவார்.