

கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில், கிறிஸ்து மக்களுக்காக தன் உயிரைத் தியாகம் செய்ததை நினைவுபடுத்தும் பொருட்டு, அப்பத்தையும் ரசத்தையும் ஒப்புக்கொடுப்பர். அப்பம் இயேசுவின் உடலாகவும் ரசம் இயேசுவின் ரத்தமாகவும் உணரப்படும்.
சமீபத்தில் ஓர் அந்நிய தேசத்து குருவானவருக்கு எழுந்தேற்றத்தின்போது அப்பக் கிண்ணத்தை உயர்த்த முடியாமல் கனத்து கிடக்க, அதில் ஏசுவின் இருப்பை உணர்ந்தவர் திருப்பலியிலேயே கதறி அழுதிருக்கிறார்.
பின் அப்பக் கிண்ணத்தை உயர்த்தி வழக்கமான செயல்பாடுகள் நிறைவேறி இருக்கின்றன. புனித பியோ அவர்களுக்கும் இந்த அனுபவம் நேரிட்டதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இயேசு பிறப்பதற்கு முன்பான காலத்திலேயே கடவுள், இந்த கோதுமை அப்பத்தை மக்களுக்கு வழங்கிய நிகழ்வு நடந்திருக்கிறது. அதன் பெயர் மன்னா.உடன்படிக்கைப் பேழையில் கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள், ஆரோனின் கோலுடன், மன்னாவும் வைக்கப்பட்டு இருக்கும்.
மோசேவுக்கு நல்ல பேச்சு வன்மையில்லை. ஆண்டவர் ஆரோனை அவரோடு அனுப்பினார். இருவரும் இஸ்ரயேல் மக்களை சீன் பாலைவனத்தை நோக்கி வழி நடத்தினர். பசியால் துடித்த மக்கள், “இந்த சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இந்த பாலை நிலத்துக்கு அழைத்து வந்தீர்கள்” என்று முறுமுறுத்தனர்.