பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மகாலிங்கேஸ்வரர்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மகாலிங்கேஸ்வரர்
Updated on: 
2 min read

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுனம்) மகாலிங்கேஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் 93-வது தலம் ஆகும்.

காவிரித் தென்கரைத் தலங்களில் இது 30-வது தலம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூகாம்பிகை சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். ஒருசமயம் அகஸ்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்கள் இடைமருதூர் வந்து உமாதேவியை நினைத்து தவம் செய்தனர். உமாதேவியும் அவர்களுக்கு அருள்பாலித்தார்.

ஈசனையும் காண வேண்டும் என்றும் அதற்கு உமாதேவியே ஒரு வழியும் சொல்ல வேண்டும் என்றும் உமாதேவியிடம் முனிவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி முனிவர்களுக்காக, உமாதேவியே தவம் இருந்தாள். ஈசனும் தேவியின் தவத்துக்கு மகிழ்ந்து அவருக்கும் முனிவர்களுக்கும் அருள்பாலித்தார்.

ஈசன் அவர்களுக்கு காட்சி தந்துவிட்டு, ஜோதி லிங்கத்தை தானே வழிபடலானார். இதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். “பூஜித்தோனும் பூஜையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே” என்று கூறிய ஈசன், “நம்மை நாமே பூஜிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மை பூஜிக்க மறந்துவிட்டனர். அதனால் பூஜிக்கிறேன்” என்றார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in