ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் பெரிய கோயிலாகப் போற்றப்படுகிறது. காஞ்சியில் இருந்து 30 கிமீ தூரத்திலும், பேரம்பாக்கம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் 10 கிமீ தூரத்திலும், திருவாலங்காட்டில் இருந்து 12 கிமீ தூரத்திலும் இத்தலம் உள்ளது.
தக்கோலத்தில் உள்ள கிரிராஜகன்னிகாம்பாள் உடனுறை ஜலநாதீஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமை கொண்டது. புண்ணிய நதியாம் விருத்தஷீர நதி எனப்படும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.