

கிணறுகள் பலவிதம். அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை கூறும். கிணறுகள், கோயில் அபிஷேகத்துக்கும் வீட்டுக்கும் தண்ணீர் தரும் ஏற்பாடு மட்டுமல்ல. கிணறும் கிணற்றடியும் அக்காலப் பெண்கள் தங்கள் துயரத்தைச் சொல்லி கண்ணீர் சிந்துவதை மெளனமாக செவி கொடுக்கும் தோழிகளாகவும் இருந்துள்ளன.
திருவாரூர் தியாகராஜர் கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக உள்ளே செல்லும்போது முக்குத்திக்கேணி காணப்படுகிறது. ஒரு சமயம் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் அன்னை கமலாம்பிகையின் மூக்குத்தி தொலைந்து விட்டது. அது, அந்தக் கிணற்றிலிருந்து வெளிப்பட்டது. தற்போது இக்கேணி மூடப்பட்டுள்ளது.