

கும்பகோணத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில், குழந்தை வரம் அருளும் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் ஈசன் மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: நித்துருவர் - வேதிகை தம்பதி, குழந்தைப் பேறு வேண்டி முல்லைவனத்து நாதனையும், இறைவியையும் வணங்கினர். இதையடுத்து வேதிகை கருவுற்றாள். வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் வெளியில் சென்றிருந்த சமயம் கர்ப்ப அவஸ்தை பட்டாள். அச்சமயம் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து யாசகம் கேட்டார்.