

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயில் 58-வது தேவாரத் தலமாக விளங்குகிறது. திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார்.
தல வரலாறு: முனிவர் ஒருவர் தாம் சிவனுக்குச் செய்த தவறால், இத்தலத்தில் மான்களாகப் பிறந்து வந்த ஓர் அசுர தம்பதிக்கு மகனாக அவதரித்தார். ஒரு முறை இரை தேடச் சென்ற மான்கள் தமது சாப விமோசனம் வேண்டியதால், சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி அவற்றுக்கு முக்தி அளித்தார்.