

சக்தியின் அவதாரங்களில் ஆக்ரோஷமான அவதாரம் காளியம்மன் அவதாரம். தில்லை, புலியூர் என அழைக்கப்படும் சிதம்பரத்துக்கு நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் எல்லை தெய்வங்களாக இருந்தாலும் மக்களால் பெருமளவில் கொண்டாடப்படுவது தில்லை மகா காளியம்மன்தான்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் பகுதியை குறுநில மன்னர்கள் ஆண்டபோது குறுநில மன்னர்களுக்கும் ஜமீன் குடும்பத்தினருக்கும் இடையே குதிரை சவாரி போட்டிகள் நடந்ததாகவும், அந்த போட்டியில், ஜமீன்தார் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், சிதம்பரத்தின் எல்லையான மணலூர் லால்புரம் என்ற இடத்தில், குறுநில மன்னர்களின் குதிரை வேகமாக செல்ல தடை ஏற்படுத்தும் வகையில், தங்கத் தகடுகளில் மந்திர வசியம் செய்து பூமிக்கு அடியில் புதைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.